Tamilnadu

உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த அ.தி.மு.க அரசு திட்டம்?

தோல்வி பயத்தின் காரணமாக இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தமால் எடப்பாடியின் அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வந்தது.

தி.மு.கவின் தொடர் அழுத்தத்தை அடுத்தும், நீதிமன்றங்களின் கண்டங்களை தொடர்ந்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வந்தது அ.தி.மு.க அரசு.

அதிலும் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகமாகத் தேர்தல் நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டுவந்தது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களையும், எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் இறுதியிலும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கான தேர்தலை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.