Tamilnadu
‘காவல்நிலைய கட்டிடத்திற்குள் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை’ - புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் விபல்குமார். இவர் இன்று மதியம் ஒரு மணி அளவில் போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபல்கமாரின் சொந்த ஊர் தொண்டமாநத்தம். தற்போது அவர் வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் இருந்து வருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி ஒன்றில் நடந்த விபத்து குறித்து விபல்குமார் விசாரித்து வந்திருக்கிறார். இதுதொடர்பாக மேலதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக விபல்குமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை செய்துகொண்ட விபல்குமார், மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார் என்று சக போலிஸ் நண்பர்கள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். பட்டப்பகலில் காவல் நிலைய கட்டிடத்திற்குள் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!