Tamilnadu
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் விரைவில் அறிவிப்பு!
6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், அதுகுறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்; விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!