Tamilnadu
சென்னை மக்களே ஜாக்கிரதை... டெல்லியைத் தொடர்ந்து காற்று மாசுபாடு அபாயத்தில் சிக்கிய தமிழகம்!
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதல் வழக்கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடும் புகைமூட்டத்துடன் காணப்பட்டுகிறது. இந்நிலையில் அந்தப்பகுதியில் காற்றின் தர அட்டவணை 625 என்ற அளவை எட்டியது. அதாவது 50 என்ற அளவு தரம் வாய்ந்ததாகவும், அதிகபட்சம் 200 என்ற அளவு மிதமானதாகவும் கருதப்படுகிறது.
ஆனால், டெல்லியில் தற்போது காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய பாதிப்பு சென்னை நகரத்திற்கும் ஏற்படும் என முன்பு எச்சரிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் காற்று மாசுபாடு இல்லை என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், வானிலை ஆய்வு மையத்தின் இத்தகைய அறிவிப்புக்கு மாறாக, கடந்த மூன்று நாட்களாக சென்னையில் காற்று மாசுபாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி காலகட்டத்தில் பெய்த மழையின் காரணமாக காற்று மாசுபாடு தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது மழை இல்லாமல் சென்னை பகுதியில் வறட்சி நிலவுவதால் சென்னை நகரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்கத் தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 361, கொடுங்கையூரில் 319, அண்ணாநகரில் 301, ஆலந்தூரில் 253, வேளச்சேரியில் 264 என்றும் மொத்தமாக 264 புள்ளி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த காற்று மாசுபாட்டை மூடுபனி என பலர் தவறாகக் கருதுகின்றனர்; ஆனால் அது உண்மையல்ல, காற்று மாசுபாடு அபாயத்தில் சென்னையும் சிக்கியுள்ளது என சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.
Also Read
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!
-
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!