Tamilnadu

யூடர்ன் போட்டது மகா புயல் : தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல, டெல்டா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸில் இருந்து 33 டிகிரி செல்ஸியஸாக பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தீவிர புயாலக நிலைகொண்டுள்ள மகா புயல், அடுத்த சில மணிநேரங்களில் அதி தீவிர சூறாவளி புயலாக உருமாறும். அதன் பின்னர் நவ.,6ல் குஜராத் டையூ மற்றும் துவாரகா இடையே கடையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்திய துணை கண்டத்தை விட்டு மகா புயல் நகரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திசை மாற்றத்தால் மகா புயல் குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.