Tamilnadu

குற்றவாளிக்கு சிபாரிசு செய்ய காவல் நிலையம் சென்ற போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது!

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை இவரது மனைவி சூரியபிரியா. இவர் தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை குடிபோதையில் வாகனம் ஒட்டிய சக்கரபாணி என்பவரை கைதுசெய்து சிதம்பரம் போலிஸார் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது போலிஸ் உடையில் காவல் நிலையம் வந்த அவர், கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருவதாகவும் கூறி சக்கரபாணியை விடுக்கக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் போலி என தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறை அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலிஸ் உடையணிந்து கிராம நிர்வாக அலுவலர், பஸ்சில் ஓசி பயணம் எனப் பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சூர்யபிரியாவுக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவர் ராஜதுரை, சக்கரபாணி ஆகியோரைக் கைதுசெய்தனர். சூர்யபிரியா, போலிஸ்

உடையில் கடலூர் மாவட்டத்தில் யார் யாரை ஏமாற்றினார், என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.