Tamilnadu

#LIVE UPDATES | மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் ‘மகா’ : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

கனமழைக்கு வாய்ப்பு இல்லை!

அரபிக்கடலில் உள்ள மகா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை

- இந்திய வானிலை ஆய்வு மையம்

Updated at: November 01, 2019 at 10:23 AM

மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் மகா புயல்

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Updated at: November 01, 2019 at 8:52 AM

மகா புயல் தீவிர புயலாக மாறியது!

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தீவிர புயலாக மாறியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தகவல்.

அரபிக் கடல் பகுதிக்கு நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Updated at: October 31, 2019 at 4:23 PM

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை : நீலகிரியில் மண்சரிவு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிகப்பட்ட இடங்களில் மீட்பு துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated at: November 01, 2019 at 10:49 AM

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Updated at: October 31, 2019 at 1:30 PM

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் நவம்பர் 4-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated at: October 31, 2019 at 1:30 PM

‘மகா’ புயல் : 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ‘மகா’ புயலாக உருவானதன் காரணமாக தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated at: October 31, 2019 at 10:33 AM