Tamilnadu
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி : மலர்தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்கு சுமார் 8,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை வண்டியூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “ தேசியம், தெய்வீகத்தை இருக்கண்ணாக கருதி வாழ்ந்து வந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேவர் குருபூஜை நாளில் அரசு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!