Tamilnadu
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை யோகா பாட்டி காலமானார்!
கோவை கணபதி பாரதிநகரைச் சேர்ந்த நானம்மாள் என்ற மூதாட்டி தனது தாத்தா, பாட்டி, தந்தையை தொடர்ந்து யோகா கலையில் சிறந்து விளங்கியவர்.
8 வயது முதல் யோகாசன பயிற்சியை தொடங்கிய நானம்மாள் கடந்த 90 ஆண்டுகளாக இந்த யோகா கலையை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.
நானம்மாளிடம் யோகா பயின்ற 600 பேர் தற்போது சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, என பல நாடுகளில் யோகா ஆசிரியர்களாக விளங்குகின்றனர். அதில் பலர் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
90 வயதாகும் இந்த மூதாட்டி தினந்தோறும் யோகா பயிற்சியை மேற்கொள்வதில் எந்த சமரசமும் செய்யாதவர். ஆகையாலேயே கோவை பகுதியில் நானம்மாள் மூதாட்டியை அனைவரும் யோகா பாட்டி என்றே அழைப்பர்.
இயற்கை உணவையே எப்போதும் உண்பார். நோய் நொடி என இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட மருத்துவமனைக்குச் சென்று நானம்மாள் மருத்துவம் பார்த்துக்கொண்டதில்லை எனவும் அவரது உறவினர் கூறுகின்றனர்.
யோகா பாட்டி நானம்மாளை கவுரவப்படுத்தும் வகையில், 2018ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. அதுபோல 2016ல் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெண்களுக்கான நாரி சக்தி விருதையும் நானம்மாள் பாட்டி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வயது மூப்பு காரணமான உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்த நானம்மாள் பாட்டி இன்று காலமானார். இவருக்கு 6 பிள்ளைகள், 12 பேரன் - பேத்திகள் மற்றும் 11 கொள்ளு பேரன், பேத்திகளும் உள்ளனர்.
அனைவரிடத்திலும் நலம் பாராட்டும் நானம்மாள் பாட்டியின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!