Tamilnadu
கமிஷன் பிரச்னையால் சீரமைக்கப்படாத சாலை - ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் இளம் பெண் பரிதாப பலி!
தமிழகத்தில் செயல்படும் அ.தி.மு.க அரசு சாலை வசதிகளை முறையாக செய்து கொடுக்கவில்லை என தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளிப்பாத வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சாலைக்கு டெண்டர் விடுவதில் பல்வேறு முறைகேடுகளில் அ.தி.மு.க வினர் ஈடுபடுவதாகவுகம் தகவல் வெளியாகின.
இதனால் கடந்த காலங்களில் சாலைகள் சீரமைக்காமல் போடப்பட்ட சாலைகளும் முடிவுறாமல் இருப்பதாக ஆங்காங்கே மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
ஆளும் அரசின் இந்த அக்கரையின்மையால் அநியாயமாக ஒரு உயிர், பலியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் இருந்து வரதராஜபெருமாள் கட்டளை என்ற சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நீடாமங்கலத்திலிருந்து வரதராஜபெருமாள் பகுதிவரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சீர் அமைப்பதற்காக தோண்டியுள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் டெண்டர் எடுத்தவர்களின் இடையே டீலிங்கில் ஏற்பட்ட மோதலால், சாலை இதுநாள் வரை போடாமலேயே வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வரதராஜபெருமாள் கட்டளை பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண் தனது வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்யும் போது பாம்பு ஒன்றுக் கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த மாலாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
கொடிய விசமுடைய பாம்பு கடித்ததால் வீட்டில் வைத்தியம் பார்க்கமுடியாது என்பதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல முடிவு எடுத்து ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளனர். பாதி வரை வந்த ஆம்புலன்ஸ், சாலைகள் முழுவதும் சகதி சேறுகள் இருப்பதால் மேற்கொண்டு வரமுடியாது எனக் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ்க்கு பெண்ணை தொட்டில் கட்டித் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் ஆம்பலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் மாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாலா உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அலட்சியம் காட்டாமல் தோண்டப்பட்ட சாலை சரிவர விரைந்து முடித்திருந்தால், அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருக்கும். எங்கள் ஊரின் மகளும் இறந்திருக்கமாட்டார். இங்கு ஏழைக்கள் மட்டுமே கடும் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் சந்திப்பதற்கு அரசு தான் காரணம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஊர் மக்கள்.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!