Tamilnadu
“தோசை மாவில் தூக்க மாத்திரை., தூக்கத்தில் உயிர்போனதாக நாடகம்!” : காதல் கணவரைக் கொன்ற மனைவி!
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் 5 வருடமாக காதலித்து அனுப்பிரியா என்றப் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு, அவர் புழல் பகுதி திருமால்நகரில் குடியேறினார்.
அங்குள்ள கோழிக்கடை ஒன்றில் சுரேஷ் வேலை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சுரேஷ் வேலைக்கு வரததால் அவர் தொலைப்பேசிக்கு கடை முதலாளி ஐயன் அழைத்துள்ளார். நீண்ட நேரம் செல்போன் அடித்தும் யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு ஐயன் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது சுரேஷ் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.
வீட்டிற்கு வரசொன்னதை அடுத்து விரைந்து சென்ற ஐயனிடம், ”இரவில் குடித்துவிட்டு தகராறு செய்த சுரேஷ் என்னை வெளியே தள்ளிவிட்டு தூங்கிவிட்டார். காலையில் எழுப்பும் போது பேச்சுமூச்சு இல்லை” என அவரது மனைவி அனுப்பிரியா கூறியுள்ளார்.
பின்னர் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். போலிஸாரிம் சுரேஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கடை ஓனர் புகார் அளித்தார்.
அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணையை தொடங்கினார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ் மூச்சு திணறி இறந்ததாகவும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறப்பட்டடுள்ளது. இதனையடுத்து சுரேஷ் மனைவியை போலிஸார் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய அனுப்பிரியா பின்பு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலிஸாரிம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், சுரேஷை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அனுப்பிரியா தனது நண்பர் முரசொலிமாறனுடன் பேசுவதை சுரேஷ் விரும்பவில்லை. அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டைப் போடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துள்ளார். இரவு வேலை முடிந்ததும் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற சுரேஷ்க்கு தூக்கமாத்திரையை துளாக்கி மாவில் கலந்து தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். மதுபோதையில் இருந்ததால் சுரேஷ் உடனே மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த ஆண் நண்பருடன் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளனர். மயக்கத்தில் இருந்த சுரேஷ் அலறல் சத்தம் இல்லாமல் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் காலையில் எதுவும் நடக்காதது போல நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருக்கும் முரசொலிமாறனைத் தேடி வருகின்றனர்.
5 வருடமாக காதலித்து ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கணவனைக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட எஞ்சின் ஆட்சி… ஒன்றுக்கும் உதவாததே பா.ஜ.க எஞ்சின் - முரசொலி தலையங்கம்!
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!