Tamilnadu
‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானை சேர்த்துடுங்க’ - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!
ராஜீவ்காந்தி இறப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இதுதொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்ற இணையற்ற தலைவரும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச்செய்த ஒப்பற்ற தலைவருமான ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொது மேடையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அரசியல் விளம்பரத்துக்காக வெற்று கூச்சலிடும் சீமான் எங்கள் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? இந்திய நாட்டின் ஈடில்லா முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை இன துரோகி என்று கூறும் சீமான் தமிழர்களின் உணர்வுகளை தூண்டி வியாபார அரசியல் செய்யும் உங்களுக்கு எங்கள் அன்பு தலைவரை பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி கிடையாது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு தீவிர விசாரணை நடத்தி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
ஏற்றமிகு தலைவர் ராஜீவ் காந்தியை தரமற்ற முறையில் விமர்சித்த சீமானின் கருத்தை தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!