Tamilnadu
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: எழுத்தாளர் உட்பட 9 திபெத்தியர்கள் புழல் சிறையில் அடைப்பு!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை வருகையின் போது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்த திபெத்திய மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருநாடு உறவு குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அதனையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப்பார்க்க உள்ளனர். இதற்காக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னைக்கு வரவிருக்கும் ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஆதி நகரில் திபெத்திய மாணவர்கள் 8 பேர் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த சேலையூர் சரக போலிஸார், திபெத்திய மாணவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த திபெத்திய கொடி, விமர்சன பதாகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரிடமும் விசாரணை நடத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தை விடுவிக்க வேண்டும் எனக் கோரி சீனாவின் குடியரசுத் தினத்தன்று டெல்லியில் அண்மையில் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மாமல்லபுரத்துக்கு வரவுள்ள சீன அதிபருக்கு சிவப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதியில் பதுங்கியிருந்த திபெத் நாட்டைச் சேர்ந்த டென்சின் சுண்டியு என்ற எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான இந்த நபரை விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலிஸார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!