Tamilnadu
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழகம் முழுக்க 92,771 வாக்குச்சாவடிகள்!
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நாளை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். சென்னை மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) லலிதா வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ள 1.45 லட்சம் வாக்கு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!
-
விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. இறுதியில் திக் திக்.. வெற்றி பெற்றது யார்? - விவரம்!
-
CAMPA Energy : அஜித்திற்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்… இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு... இதுதான் காரணமா?
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!