Tamilnadu
உதித் சூர்யாவை அடுத்து, மேலும் 2 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? - கோவை தனியார் கல்லூரி புகார்!
உதித் சூர்யாவை தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 2 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கோவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்த மாணவரையும் அவரது பெற்றோரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேடி வந்த தனிப்படையினர் நேற்று திருப்பதி மலை அடிவாரத்தில் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து, தமிழகமெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரியில் இதேபோன்று நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டிருக்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்தது.
அப்போது, நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், அனுமதி கடிதத்தில் உள்ள புகைப்படமும் வெவ்வேறாக இருந்ததால் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்விருவரும் காஞ்சிபுரம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று அக்கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !