Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: ரூ.80ஐ எட்டும் அபாயம்; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, கடந்த 2 வாரங்களாக எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூ.76.83 காசுகளாகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2 வாரங்களில் மட்டும் தினந்தோறும் பைசா கணக்கில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை 2 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநிலைத் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதனால் சாமானிய மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள்.
Also Read
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!