Tamilnadu
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கு அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கி செப்.,30ம் தேதி வரை நடைபெறும். அக்.,1ம் தேதி வேட்புமனுக்களின் மீதான பரிசீலனையும், அக்.,3ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
ஆகையால், தேர்தல் களம் இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நேற்று சென்னை அண்ணா அறிவாலத்தில் தொடங்கின.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சமர்பிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !