Tamilnadu
சுபஸ்ரீ மரணம் : அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன் - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி?
கடந்த செப்டம்பர் 12ம் தேதி பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.கவினரால் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். விபத்திற்கு காரணமான பேனர் அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்ல நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!