Tamilnadu
“5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தற்போதையே முறையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 11, 12ம் வகுப்புகளுக்கான பாடங்களை 6ல் இருந்து 5 ஆக குறைப்பதற்கான கோரிக்கை விண்ணப்பங்கள் முதலமைச்சர் வசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் எனும் திட்டம் மத்திய அரசினுடையது. அடுத்த 3 ஆண்டுகள் வரை 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளதாகவும், தேர்வில் ஃபெயில் மட்டும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!