Tamilnadu
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு சட்டத்தைக் கைவிடுக” : விவசாயிகள் போராட்டம்!
விவசாயிகளின் நில உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தைக் கைவிடக்கோரி இந்திய தந்தி சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் செல்வதை கண்டித்தும், 1885ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தைக் கைவிடக் கோரியும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கத்தினர் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி கம்பங்கள் அமைக்கும் சட்டத்தைக் கைவிட்டு விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற்கும் கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும் உரிய இழப்பீடும் வழங்கவேண்டும். புதிதாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் கேபிள் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 50 விவசாயிகளை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!