Tamilnadu
மாநில உரிமைகளை பறிப்பதையே குறியாக கொண்டிருக்கிறது பாஜக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்” என தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
“இதன் ஒரு பகுதியாகதான், மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் இந்த செயல்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.” என்று கனிமொழி கூறினார்.
Also Read
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!