Tamilnadu
“ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையும்’’ - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி!
நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளும் வகையிலான, ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள், மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக இருப்பதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று டெல்லியில், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்துக் கூறிய அவர், ''ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையும். இதற்கான ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொள்ளத்தான் தமிழக உணவுத்துறை அமைச்சர் டெல்லி சென்றிருந்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைவதால் தமிழக மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்றார்.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து தனக்குத் தெரியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பொது விநியோக திட்டத்தில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!