Tamilnadu
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு உயிர் வாழும் மூதாட்டி: தூத்துக்குடியில் விநோதம்!
வடிவேலு படத்தில், பல்புகளை உண்டு வாழ்வை ஓட்டுவதாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டது நகைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள 80 வயது பாட்டி மண்ணை உண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்தையாபுரத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி மரிய செல்வம். 80 வயதான் இந்த பாட்டி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணை மட்டுமே வேளைக்கு சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மண்ணை சலித்து பத்திரப்படுத்தி, அதனை அவ்வப்போது அள்ளி சாப்பிட்டு வருகிறார் இந்த மூதாட்டி. மிட்டாய் சாப்பிடுவது போன்று மண்ணை சாப்பிட்டு வருகிறார்.
தொடக்கத்தில் மண்ணை சாப்பிடும் போது வயிற்று வலி வந்ததாகவும், காலப்போக்கில் எந்த பிரச்னையும் ஏற்படுத்தவில்லை என்றும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு வந்ததாலும், 80 வயதாகும் மரிய செல்வம் பாட்டிக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட்டதில்லை என அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் கூறுவதும் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!