Tamilnadu
”விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு ஆக்குக !” : விவசாயிகள் கருத்தரங்கில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காவிரி கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் இன்று நடந்த கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மேகதூதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் தஞ்சை மகாராஜா திருமண மகாலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புறையாற்றினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், விவசாய அணி அமைப்பாளர்கள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-
தீர்மானம்1 : காவிரி கால்வாய்களை முறையாகத் தூர் வாராததைக் கண்டித்து கண்டனத் தீர்மானம்.
தீர்மானம் 2 : ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட்டு - காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும்.
தீர்மானம் 3 : மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தீர்மானம் 4 : கஜா புயல் பாதிப்புகளைச் சரி செய்து வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
தீர்மானம் 5 : காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை உடனடியாக தீர்த்திடுக - விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்றிட வேண்டும்.
தீர்மானம் 6 : நாட்டின் ஒற்றுமை ஓங்கிட, கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும்.
தீர்மானம் 7 : அணை பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்.
தீர்மானம் 8 : “ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம்” அமைக்கும் சட்டம் - தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாத்திட வேண்டும்.
தீர்மானம் 9 : விவசாயிகள் வருமானம் மூன்று மடங்காகிட, சலுகைகளும், ஆக்கபூர்வமான திட்டங்களும் அறிவித்திட வேண்டும்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!