Tamilnadu

வாழ்வில் முதல் முறையாக ரயில் பயணத்தை அனுபவித்த மலைவாழ் குழந்தைகள்!

நவீன காலத்திலும் நகரின் வாசமே அறியாமல் இயற்கையின் வாசத்தோடும் அரவணைப்போடும் வளர்ந்து வருகின்றனர் ஈரோடு மாவட்டம் கடம்பூர், அக்னிபாவி, விளாங்கோம்பி ஆகிய மலைக்கிராமங்களைச் சேர்ந்த சிறார்கள். இந்த குழந்தைகள் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

சென்னை போன்ற மெட்ரோ நகரின் வாழ்வியலும், வாகனங்களின் இரைச்சலும் இல்லாமல் வாழ்ந்து வரும் குழந்தைகள் பேருந்துகளில் கூட இதுவரை பயணித்தது இல்லை.

அதனால், ‘சுடர்’ என்ற அமைப்பு மலைக்கிராம குழந்தைகளுக்கு ரயில் பயண அனுபவத்தை ஏற்படுத்தி தருவதற்காக சென்னைக்கு முதல் முறையாக 50 பேரை அழைத்து வந்து சுற்றிக் காண்பித்துள்ளது.

காடுகளில் பறவைகளின் ரீங்காரங்களை மட்டுமே கேட்டு ரசித்து வந்த மலை வாழ் குழந்தைகளுக்கு ரயில் பயணமும், கடலும், நகரமும் புதிய அனுபவத்தை அளித்துள்ளது.