Tamilnadu
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டக்கூடாது- உயர்நீதிமன்றம் தடை ஆணை!
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவர் லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ், வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களான ஆலந்துறை - களிமங்கலத்தில் 600 வீடுகள், தென்கரையில் 1,500 வீடுகள், பேரூர் செட்டிப்பாளையத்தில் 2,500 வீடுகள், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகள் என 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணிகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.
மலை பாதுகாப்பு ஆணைய பகுதிக்குள், வனத்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அனுமதியில்லாமல் வீடுகள் கட்டப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தபோது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் வீடுகள் கட்டுவதற்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை மேற்கோளிட்ட மனுதாரர் தரப்பு, மலைப்பகுதியில் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட 'இண்டஸ்' கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த வீடுகள் கட்டப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், வீடுகள் கட்டப்படவுள்ள நிலத்தை குடியுருப்பு பகுதியாக மாற்றுவதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதால் மேற்கொண்டுவரும் கட்டுமான பணிகளை நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!