Tamilnadu

குலக்கல்விக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை மூட அ.தி.மு.க அரசு உத்தரவு?

நீலகிரியில் 6, வேலூர், சிவகங்கையில் தலா 4, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் தலா 3 பள்ளிகளை மூட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அ.திமுக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், மக்களவையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.பி. ஓ.பி. ரவீந்தரநாத் குமார் பகிரங்கமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதை காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள 46 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இன்னும் இரண்டு நாட்களில் மூட தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் 6, வேலூர், சிவகங்கையில் தலா 4, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் தலா 3 பள்ளிகளை மூட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அ.தி.மு.க அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், தருமபுரி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும், மற்ற மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு பள்ளி என்ற வகையில் மொத்தம் 46 அரசு பள்ளிகளை மூட அ.தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அவ்வாறு மூடப்படும் பள்ளிக் கட்டங்களை நூலகங்களாக மாற்றப்படும் என அரசு பம்மாத்து வேலை பார்க்கிறது என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.