Tamilnadu

எதிர் கருத்து சொன்ன அமைச்சரின் பதவி பறிப்பு : சர்வாதிகாரியாக மாறும் எடப்பாடி? அழிவை நோக்கி அ.தி.மு.க

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து தன்னிடம் முதலமைச்சர் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என கூறியிருந்தார்.

மேலும், அரசு கேபிள் டிவி தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்தமாக கேபிள் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் 2 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் அமைச்சர் மணிகண்டன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சருக்கும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் எதிராக மணிகண்டன் பேசியதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய் துறை அமைச்சராக உள்ள உதயக்குமாரிடம் தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.