Tamilnadu

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்பதில் மோசடி - ஊழியர்கள் குற்றச்சாட்டு

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்பதில் பல ஆயிரம் கோடி மோசடி நடந்திருப்பதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கலைஞர் செய்திகள்தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டியளித்த பி.எஸ்.என் எல் ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்லப்பா, பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனக்கு சொந்தமான 63 இடங்களை விற்பனை செய்ய உள்ளது. அதற்கான கணக்கிடும் பணியினை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதன் விற்பனை விலையானது சராசரி விலையைவிட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.

இதுபோல் சென்னையில் உள்ள 8 இடங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன் சராசரி விலை ரூ.3863கோடி. ஆனால், ரூ.2753 கோடியில் குறைவான விலைக்குத் தனியாருக்கு விற்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள இடங்களை வெறும் 20 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்து அதன் மூலம் முறைகேடுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஈடுபடவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற முறைகேடுகளை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.