Tamilnadu
எட்டு உயிர்களை காவு வாங்கிய 8 வழிச்சாலை ? நிலத்தை மீட்கப் போராடிய பெண் மன உளைச்சலால் உயிரிழப்பு!
சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த பணிக்காகத் தமிழக அரசு, எந்த வித அனுமதியும் இன்றி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி எல்லைக் கல் நடப்பட்டது.
8 வழிச்சாலை திட்டத்தால் சேலத்தில் உள்ள 6 கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனவே திட்டத்தைக் கைவிடவேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 8 வழிச் சாலையில் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது எனத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கடுமையான மன உளைச்சலில் இருந்துவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுமளவு பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரது மனைவி மணியம்மையார். இவர்களுக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் 8 வழிச்சாலை சாலை அமைகிறது. இதனால் அ.தி.மு.க அரசு இவர்களது நிலத்தைக் கடந்தாண்டு கையகப்படுத்தி எல்லைக்கல் நட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் சொந்த நிலம் பறிபோவதாகத் தெரிந்த நாளிலிருந்து தொடர்ந்து நிலத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த போராட்டங்களுக்கும் செவி சாய்க்காத எடப்பாடி அரசு நிலத்தைக் கையகப்படுத்துவதில் உறுதியாக இருந்தது.
மனதளவில் கடுமையாக பாதிப்படைந்த மணியம்மையார் நிலம் பறிபோவதை பொறுக்கமுடியாமல் வேதனையுடன் புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், மிகக் கடுமையான மன உளைச்சலில் இருந்த மணியம்மையார் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார்.
ஏற்கனவே, 8 வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டபின், அதனால் பாதிக்கப்பட்ட 7 பேர் இறந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் மணியம்மையாரின் உயிரிழப்பும் சேர்ந்துள்ளது. அவரது உடலுக்கு நேற்று காலை விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !