Tamilnadu
அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் அநீதி... தாழ்த்தப்பட்டோருக்கு கட் ஆஃப் 95 மார்க்.. முன்னேறிய பிரிவினருக்கு 42!
இந்திய அரசின் அஞ்சல் துறை, கிளை அதிகாரிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் 4,442 பணியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகியுள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 100க்கு 92 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவினர் 94.8 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெறுவார்கள். பழங்குடியினருக்கு குறைந்தபட்ச கட் ஆஃப் மதிப்பெண் 89.6.
ஆனால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர் 42 மதிப்பெண் வாங்கினாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 42 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 453 முன்னேறிய பிரிவினர் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெறவும், பிற்படுத்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான போட்டித் தேர்வுகளில் முட்டிமோதி வெற்றிபெற வேண்டியதாயிருக்கிறது. ஆனால், முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% பொருளாதார இட ஒதுக்கீட்டின் மூலம் மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களும் தேர்வாகியுள்ளனர்.
சமூகத்தில் முன்னேறிய பிரிவினருக்கான விகிதாச்சாரம் குறைவாக இருக்கும்போதிலும், அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக்கும் இந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!