Tamilnadu
“எங்களையும் தனி மாவட்டமா பிரிச்சு விடுங்க” : மயிலாடுதுறை மக்கள் போராட்டம்!
அண்மையில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தது தமிழக அரசு. அதனையடுத்து இந்த வாரம் சட்டப்பேரவையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை 34வது மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் உள்ள செங்கல்பட்டை 35வது மாவட்டமாகவும் பிரித்து உத்தரவிட்டது தமிழக அரசு.
இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியையும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இரண்டாவது நாளாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகமாக உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி குத்தாலம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர்களின் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வருகிற ஜூலை 22 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிடில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !