Tamilnadu
சோழவரம் ஏரி தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தியது ஏன்? : பொதுமக்கள் கண்டனம்!
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை பெருநகரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு நீராதாரமாக உள்ள சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டு கிடப்பதால் தண்ணீருக்காக இரவு பகலாக மக்கள் திண்டாடி வருகின்றனர். ஆகவே, நீர் நிலைகளை தூர்வாரச் சொல்லி பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சோழவரம் ஏரியை தூர்வாரும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏரியை தூர்வாரும் பணி மே மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தூர்வாரும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஏரியின் மணல் திட்டுகளுக்கு இடையே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணியை மேற்கொள்ளக் கூடாது என அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!