Tamilnadu
புதுமணத் தம்பதியை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் : மீண்டும் தலைதூக்கும் ஆணவக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் சோலைராஜா என்ற உப்பள தொழிலாளி. இவர் பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர், குளத்தூரில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் உட்புகுந்து சோலை ராஜாவையும், பேச்சியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர்.
தங்களது எதிர்ப்பை மீறி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்த ஆத்திரத்தால் பேச்சியம்மாளின் பெற்றோர் மர்ம கும்பலை ஏவி விட்டு கொலை செய்ய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன் மக்களவையில் ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான சட்டம் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!