Tamilnadu
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் ஆணை!
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும் எனக் கோரியும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்போலோ மருத்துவமனை.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அப்போலோவின் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 வாரம் காலம் தடை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், அண்மையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!