Tamilnadu
சாதிய ஆணவப்படுகொலையில் தாக்குதலுக்கு ஆளான தர்சினி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தர்சினி பிரியா என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், பெற்றோரின் எதிர்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த கனகராஜின் சகோதரர் வினோத், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில், காதலன் கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலி தர்சினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆணவக் கொலை செய்த வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தர்ஷினி ப்ரியா, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே, காதலன் கனகராஜ் உயிரிழந்த நிலையில், காதலித்த பெண் தர்சினி பிரியாவும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தர்சினி பிரியாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்தது தர்சினி பிரியாயின் தாயார் செய்தியாளர்களிடையே கூறுகையில்," ஆணவக்கொலை செய்த வினோத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
சாதி வெறியால் ஆணவப் படுகொலை செய்த வினோத்-க்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும். தொடர்ந்து எங்களுக்கு கொலைமிரட்டல் விடுகின்றார். எனவே பாதுகாப்பு அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் தலித் இயக்கங்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் பங்கேற்றுள்ளனர்.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?