Tamilnadu
விவாதிக்கவேண்டிய முக்கிய பிரச்னைகளை ஆலோசிக்க தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட முக்கியக் கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியில் நிலவக்கூடிய முக்கியப் பிரச்னைகளையும், முக்கிய கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்தும் தி.மு.க அறிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் விவாதிக்கக் கோரிய பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!