Tamilnadu
பரோல் வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் இருந்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர். இவர்களின் விடுதலை குறித்த அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தனது மகளின் திருமணத்திற்காக 6 மாத காலம் பரோல் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், தன்னை நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியை ஆஜர்படுத்துவதில் காவல்துறைக்கு என்ன சிரமம் என ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த காவல்துறை கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் ஒருவாரம் அவகாசம் கோரியிருந்தது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு அவகாசம் அளித்து, நளினியை ஜூலை 5ம் தேதி பிற்பகலில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!