Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு மாட்டிக் கொள்ளும் விவசாயிகள்? நூதன போராட்டம்!
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு முன்னதாக ஜூன் 1 தேதி போராடிய 13 இடங்களில் போராட்டம் நடத்திய 450 விவசாயிகள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் கிணறு அமையவுள்ள கர்ணாவூரில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட 3 விவசாயிகள் நூதன முறையில் தூக்கு மாட்டிக் கொள்ளும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!