Tamilnadu
தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன செய்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு, நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையின் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், சென்னை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பிற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், தற்போது எத்தனை ஆலைகள் செயல்படுகின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது என்ற விவரங்களை ஜூன் 17 ம் தேதி தாக்கல் செய்யவும் அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் மக்கள் தண்ணீரின்றி அவதிக்குள்ளாகியுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்பது குறித்தும் தெரிவிக்கும்படி, அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
-
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : யார் யார் எந்த தொகுதியில் போட்டி?
-
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : DravidianModel 2.0 Starts Now - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க கூட்டணி : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் இதோ!
-
CPM, CPI கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? : முழு விவரம் இதோ!