Tamilnadu
மொபைல் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்: மின்வெட்டால் சிவகங்கையில் நடந்த அவலம்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மின்வெட்டு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் ஐவர் வெண்டிலேட்டர் செயல்படாததால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது என்று கூறலாம்.
இதேபோல், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டு 3 மணிநேரம் ஆகியும் மின்சாரம் வராமல் உள் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
அதுமட்டுமில்லாமல், அவரச சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மின்சாரம் இல்லாததால் செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விபத்து காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்களையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லாமையே மின்வெட்டை சீரமைக்காததற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தில் மின்வெட்டே இல்லையென கொக்கரித்திருக்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!