Tamilnadu
ஆளுநர் விவகாரம் : நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!
ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபால் உள்ளிடோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வரும் 10ம் தேதி நேரில் ஆஜராக நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக்கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நக்கீரன் கோபால் உள்பட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்ற சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய - மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எழும்பூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனவும், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து , விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!