Tamilnadu
கலைஞரின் பிறந்தநாளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தி.மு.க தலைமையில் பொதுக்கூட்டம்!
முத்தமிழறிஞர் கலைஞரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் தி.மு.க சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ வரவேற்புரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், ஸ்ரீ வாண்டையார், எஸ்றா.சற்குணம், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன், பி.வி.கதிரவன், அதியமான், கு.செல்லமுத்து, எர்ணாவூர் நாராயணன், திருப்பூர் அல்தாப், பஷீர் அகமது, பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கு முன்னதாக இன்றுகாலை காலை 10 மணியளவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறுகிறது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!