Tamilnadu
அரசு அலுவலகங்களில் துப்பட்டா கட்டாயம் : கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க.,வாக உருமாறும் அ.தி.மு.க
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு குறித்து அ.தி.மு.க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் சேலை, சுடிதார் மற்றும் சல்வார் கமிஸ் ஆடைகளை மட்டுமே உடுத்த வேண்டும். குறிப்பாக சுடிதார், சல்வாருடன் கட்டாயம் துப்பட்டா அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆண்கள் சாதாரண பேண்ட் சட்டை அல்லது கோட் அணிந்து வரலாம் என்றும், அடர் நிற ஆடைகளோ, டீ.சர்ட்களோ அணியக் கூடாது என்றும் கெடுபிடி தந்துள்ளது.
பெண்கள் அணியும் ஆடையால் மற்றவர்கள் ஈர்க்கப்பட்டு கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பெண் சுதந்திரம், பெண் உரிமையை போற்றுவோம் என்றெல்லாம் மேடைக்கு மேடை பேசிவிட்டு, துப்பட்டா அணிய கட்டாயப்படுத்தி வரும் அ.தி.மு.க அரசு, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க.,வின் மனநிலையை திராவிட கொள்கைகள் கொண்ட மக்களிடம் திணிக்க முற்படுவது இந்த செயலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!