Tamilnadu
தமிழகத்தில் அடித்து நொறுக்கும் தி.மு.க : நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மே 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி, தற்பொழுது மத்திய சென்னையில் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் 2,95,77 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி நான்காம் சுற்று முடிவில் 41,637 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 50,902 வாக்கு வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதே போல் தமிழகத்தில் பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!