Tamilnadu
விளை நிலங்களை நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன்: ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.
மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் 5 ஒன்றியங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 6வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மன்னார்குடி அருகே மேலவந்தாளச்சேரி ஊராட்சியில் அப்பகுதி மக்கள் அந்தோணியார் கோயிலில் பிரார்த்தனை செய்தனர். பின்னர் கோயில் முன்பு பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பருத்தி வயலில் இறங்கி விவசாயிகள், பெண்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மன்னார்குடி அடுத்த அரிச்சபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நட்ததி வருகின்றனர்.
Also Read
-
“பா.ஜ.க. வந்தால் பற்றி எரியும்… மீண்டும் வந்தால் மீண்டும் எரியும்!” - முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?