Tamilnadu
புத்தக பை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்த வேண்டும் எனக்கூறி பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் ஹேமலதா உள்ளிட்ட 2பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்கு பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
பெற்றோர்களின் தரப்பு நியாயங்களை கேட்டறிந்த பின்னர் நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை அரசு நிர்ணயித்துள்ள விலையில் கொடுக்கலாம், ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!