Tamilnadu
குழந்தை விற்பனை வழக்கில் 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் செவிலியர் உதவியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா தர்மபுரியை சேர்ந்த ஒருவரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை விற்பனையில் அவருக்கு உதவியாக இருந்த கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகள் விற்பனை தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையைத் தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதாகிகைதாகி சிறையில் உள்ள அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர், ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!