Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : மேலும் ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ!
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த மணிவண்ணன் என்ற இளைஞரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!