Tamilnadu
சேலம் கோகுல்ராஜ் வழக்கு : மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23 அன்று மாயமானார்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. பின்னர், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சி.பி.சி.ஐ.டி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்ம் வழக்கு மீதான விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாகவும், அதனால் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்பதாலும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் முறையாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதாலும் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கோகுல்ராஜ் தாய் சித்ரா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !